பெரியாண்டவர் ஆலயம், திருநிலை கிராமம்
9842740957 www periyandavar.com
- 17.02.2015 செவ்வாய் கிழமை அன்று மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு திருநிலை பெரியாண்டவர் ஆலயத்தில் சிறப்புடன் நடைபெற்றது சிறப்பு நிகழ்ச்சி புகைப்படம்
- www.periyandavar.com
குல தெய்வ வழிபாடு அவ்வளவு சாதாரணமானவை அல்ல இந்த வழிபாட்டால் உங்களுக்கு உங்கள் எதிரிகளால் ஏற்படும் பில்லி, சூன்யம், ஏவல். மற்றும் கஷ்டம். நஷ்டம். குடும்ப கலக்கம், கிரக தோஷங்கள் எல்லாமே உங்களை கடுமையாக பாதிக்காமல் உங்க உயிர்காக்கும் காவல் தெய்வம் தான் "குல தெய்வம்" என்பார்கள்
இந்த குல தெய்வத்தை அடையாளம் கண்டு மறவாமல் வழிபாடு செய்து துஷ்டர்களிடமும் துஷ்ட சக்திகளிடமிருந்தும் தற்காத்துக் கொள்ளுங்கள்.
www.periyandavar.com
www.periyandavar.com
தொலைவிலும், திருப்போரூரிலிருந்து மேற்கே 12 கி.மி. தொலைவிலும் இத்தலம் உள்ளது. திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருநிலைக்கு பேருந்து தடம் எண் T11, T75 மற்றும் சரஸ்வதி மினி பஸ் வசதி உள்ளது.
தலத்தின் மகிமை
- சிவன், சக்தி ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே அமையப் பெற்ற திருத்தலம்.
- பெரியாண்டவர் ஆலய புராண வரலாற்றின்படி சக்தியின் சாபத்தால் சித்தம் கலங்கி பித்தம் பிடித்த நிலையில் ஈசன் உலகை வலம் வந்து திருநிலையில் ஓருநிலையாய் நின்ற இடம்.
- தாயின் கருவின்றி பெரிய மனிதராக பிறவியெடுத்து ஈசனே உலகை வலம் வந்தபோது பார்வதியால் பெரியாண்டவர் என்று வணங்கப்பட்ட திருத்தலம்.
- சிவபெருமானின் பாதம் பட்ட தலம்.
- குழந்தைப் பேறு அருளும் பரிகாரத் தலம்.
- கலியுகத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஈசன் ஜோதி ரூபமாக காட்சி அளித்து நின்ற தலம்.
- ஜோதியாக காட்சி தந்த வெட்ட வெளி இடத்தில் சுயம்புலிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபடும் தலம்.
- லிங்கத்தின் வலதுபுறம் சிவசக்தி இருவரும் ஒருங்கே அமர்ந்து தெய்வீகக் காட்சி தருகின்ற தலம்.
- பார்வதி தேவி திருநிலைநாயகி என அழைக்கப்படும் தலம்.
- சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம்.
- சுயம்பு லிங்கத்தைச் சுற்றி சிவகணங்கள் மண் உருக்கொண்டு இறைவனை பூஜிக்கும் தலம்.
- குளம் மற்றும் ஏரி ஆகிய இரு கரைகளுக்கு மத்தியில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ஆலயம்.
தலத்தின் இருப்பிடம்
பெரியாண்டவர் ஆலயம், திருநிலை கிராமம்
9842740957 www